பூசை தொடர்புகளுக்கு

பவான் 076 441 44 65

ரவி 078 745 99 96 

ரவி 041 440 65 50

திறக்கும் நேரம்

பூஜை நாட்கள்:

செவ்வாய், வெள்ளி, மற்றும் விசேட தினங்கள்

பூஜை நேரம்:

அபிஷேகம்: 18:30

பூஜை ஆரம்பம்: 19:15

பிரசாதம்: 20:30

பஜனாமிர்தம் இறுவட்டு

விளம்பரம்

அம்பிகை அடியார்களே!

எதிர்வரும் 13.04.2012 வெள்ளி 18:30 மணிக்கு அருள்மிகு  துர்க்கை அம்மன் ஆலயத்தில்  சித்திரைப் புத்தாண்டு விசேட பூசை , விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை நடைபெறும் என்பதை அம்பாள் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். மலரும் சித்திரைப்புத்தாண்டில் எமது தாயகத்தில் எம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு கிடைக்க மீனாட்சி அம்பாள்அருளை வேண்டி நிற்போமாக.
 

  • 12.04.2012 வெள்ளிக்கிழமை 18:00 மணி முதல் 20:00 மணி வரை ஆலயத்தில் மருந்து நீர் வழங்கப்படும்.
  • 13.04.2012 வியாழக்கிழமை 09.00 மணி முதல் 14:00 மணி – 17:00 மணி முதல் 21:00 வரை ஆலயம் திறந்திருக்கும்
 

நிகழும் கர வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (25.11.2011) வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் அலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு.

இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவீரர் பூசை வழிபாடும் , மாவீரர் மோட்ச தீப வழிபாடும் நடைபெற திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு மாவீரர் கனவு நனவாகவும் , மாவீரர் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல துர்க்கை அம்மனை வேண்டி நிற்போம்.

அபிசேகம் மாலை 18.30 மணிக்கு
கூட்டுப்பிரார்த்தனை 18.45
விசேட பூசை இரவு 19.00
மாவீரர்களுக்கு விசேட பூசை 19.30
மாவீரர் மோட்ச தீப வழிபாடு 20.30

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் அருள்மிகு துர்கை அம்மன் ஆலயத்தினர்.

'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர்

 

14 வது ஆண்டு நவராத்திரியையொட்டிய சமய அறிவுப்போட்டி 2011
சித்தியடைந்த மாணவர்கள் விபரங்கள்

 

மழலைப்பிரிவு அ    

தேவாரமனனம்
1.இடம் உருத்திரன் அருஜன்
2.இடம் மனோகரன் அபிரா
3.இடம் தயாபரன் வரதஸ்

கொன்றை வேந்தன்
1.இடம் உருத்திரன் அருஜன்
2.இடம் மனோகரன் அபிரா

விரிவு...

 

நிகழும் விகிர்தி வருடம் கார்த்திகைமாதம் 27.10.2011 வியாழக்கிழமை தொடக்கம் 31.10.2011 திங்கக்கிழமை வரை5 நாட்களும் சாயங்காலம் முருகப் பெருமானுக்கு பூசை ஆராதனைகள் நடைபெறும். 6ம் நாள் 01.11.2011 செவ்வாய்க்கிழமை காலை பூசையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறூம்.அடியவர்கள் பூசை ஆராதனைகளில் கலந்து முருகப்பெருமானின் அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

அம்பிகை அடியார்களே!

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் என்ற நாமத்தைப்பெற்ற கிரகம் சனிபகவானே. எங்கள் சமயவிரதங்களில் சனிஸ்வர விரதமும் ஒன்றாகும். சனிதோசம் உள்ளவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருப்பது மிகச்சிறந்தது எனவே புரட்டாதிச்சனியன்று அனைவரும் எள்ளெண்ணை தீபமேற்றி தோசம் நீங்க வழிபாடு செய்வதுடன் நவக்கிரகநாயகியான ஆதிபராசக்தியின் ஓர் வடிவாகிய துர்க்காதேவியை வழிபாடுசெய்து வேண்டிய வரங்களைப்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விரத நாட்கள்

17.09.2011 முதலாம் சனி  (10:00-15:00 மணி)
24.09.2011 இரண்டாம் சனி (10:00-15:00 மணி)
01.10.2011 மூன்றாம் சனி  (10:00-15:00 மணி)
08.10.2011 நான்காம் சனி  (10:00-15:00 மணி) 
15.10.2011 ஐந்தாம் சனி   (09:00-17:00 மணி அன்னதானம் வழங்கப்படும்)

சனிபகவானிற்கு எள்ளெண்ணை தீபமேற்றுவதற்கு தேவையான பொருட்கள், அர்ச்சனைப்பொருட்கள் என்பன ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
 

 

27.09.2011- 06.10.2011

அம்பிகை அடியார்களே!
அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும் அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தசரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய பருவத்தைச்
சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி மன நிறைவு எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
விரத நாட்கள்

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. 27.09.2011
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. 30.09.2011
இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. 03.10.2011
 

 
 

அம்பிகை அடியார்களின் கவனத்திற்கு!!!


எங்களின் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகமானது 12வது ஆண்டின் நிறைவில் நடத்த வேண்டியுள்ளது. எனவே தற்போது அம்பாள் ஆட்கொண்டிருக்கும் இந்த ஆலயமானது அதற்குரிய இடவசதி போதுமானதாக அமையவில்லை. எங்கள் ஆலயம் வளர்ச்சியடைந்து அடியவர்களின் பிரவேசமும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலமையில் ஆலயத்திற்காக ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. நிரந்தரமாகவோ அல்லது வாடகை அடிப்படையிலோ அமையலாம்.

விரிவு...

 
பூசைகள்
Öffnungszeiten
Dinstag und Freitag
17:00 bis 21:00 Uhr
 
und Spezialtage Änderungen
vorbehalten.
Feste und Feiertage Temple

01.01.2012  

Englische Neujahrsfeier

08.01.2012  

Vollmondsgebet, Arthira Tharisanam

15.01.2012  

Thaipongal

06.02.2012  

Thaipoosam

und Weiter

Mullivaikal logo

18. 05. 2012

முள்ளிவாய்க்கால்
நினைவு நாள்
Sivan TV