பூசை தொடர்புகளுக்கு

பவான் 079 342 52 28

ரவி 078 745 99 96 

ரவி 041 440 65 50

திறக்கும் நேரம்

பூஜை நாட்கள்:

செவ்வாய், வெள்ளி, மற்றும் விசேட தினங்கள்

பூஜை நேரம்:

அபிஷேகம்: 18:30

பூஜை ஆரம்பம்: 19:15

பிரசாதம்: 20:30

பஜனாமிர்தம் இறுவட்டு

விளம்பரம்

நாட்காட்டி 2011

நவராத்திரிவிழா நிகழ்ச்சி நிரல்
27.09.2011- 06.10.2011

17.30மணிக்கு அபிசேகம்

18.15மணிக்கு வழமையான பூசை

18.30மணிக்கு வசந்தமண்டபபூசை (நிகழ்ச்சிகள் உட்பட)

20.45மணிக்குபிரசாதம் வழங்கல்

உபயகாரர் 17.30மணிக்கு வருகைதருமாறு வேண்டுகின்றோம்

6.10.2011வியாழன் விஜயதசமி அன்று 14:00 - 16:00மணிவரை ஏடு தொடக்கப்படும்.

 பங்கு பற்றுவோர்கள் தயவு செய்து பெயர்களை பதிவு செய்யவும் 

 

14 வது ஆண்டு நவராத்திரியையொட்டிய சமய அறிவுப்போட்டி 2011
சித்தியடைந்த மாணவர்கள் விபரங்கள்

 

மழலைப்பிரிவு அ    

தேவாரமனனம்
1.இடம் உருத்திரன் அருஜன்
2.இடம் மனோகரன் அபிரா
3.இடம் தயாபரன் வரதஸ்

கொன்றை வேந்தன்
1.இடம் உருத்திரன் அருஜன்
2.இடம் மனோகரன் அபிரா

விரிவு...

 

அம்பிகை அடியார்களே!

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் என்ற நாமத்தைப்பெற்ற கிரகம் சனிபகவானே. எங்கள் சமயவிரதங்களில் சனிஸ்வர விரதமும் ஒன்றாகும். சனிதோசம் உள்ளவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருப்பது மிகச்சிறந்தது எனவே புரட்டாதிச்சனியன்று அனைவரும் எள்ளெண்ணை தீபமேற்றி தோசம் நீங்க வழிபாடு செய்வதுடன் நவக்கிரகநாயகியான ஆதிபராசக்தியின் ஓர் வடிவாகிய துர்க்காதேவியை வழிபாடுசெய்து வேண்டிய வரங்களைப்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விரத நாட்கள்

17.09.2011 முதலாம் சனி  (10:00-15:00 மணி)
24.09.2011 இரண்டாம் சனி (10:00-15:00 மணி)
01.10.2011 மூன்றாம் சனி  (10:00-15:00 மணி)
08.10.2011 நான்காம் சனி  (10:00-15:00 மணி) 
15.10.2011 ஐந்தாம் சனி   (09:00-17:00 மணி அன்னதானம் வழங்கப்படும்)

சனிபகவானிற்கு எள்ளெண்ணை தீபமேற்றுவதற்கு தேவையான பொருட்கள், அர்ச்சனைப்பொருட்கள் என்பன ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
 

 

27.09.2011- 06.10.2011

அம்பிகை அடியார்களே!
அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும் அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தசரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய பருவத்தைச்
சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி மன நிறைவு எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
விரத நாட்கள்

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. 27.09.2011
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. 30.09.2011
இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. 03.10.2011
 

 
 

துர்க்கை அம்மன் ஆலய பரிபாலனசபையினர் விபரங்கள்


தலைவர்

திரு. இராமநாதன் இராசலிங்கம் (பவான்) 076 442 18 53

உபதலைவர்

விரிவு...

 

தைப்பூசம் இந்நாள் சைவசமயத்தெய்வங்கள் அனைத்திற்கும் சிறப்புடையதாகும். அம்பாள் அண்டசராச்சரங்களையும் உயிர்களையும் தோற்றுவித்த நாளாகவும், சிதம்பரத்தில் எம்பெருமான் நடராஜர் சிவகாமிசமேதராய் ஆனந்தத்தாண்டவம் ஆடியதினமாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது. சித்தர்கள் முருகப்பெருமானை வேண்டித்தொழும் தினமும் இதுவாகும். தவிர திருவிசைப்பா உலகிற்களித்த வள்ளலார் சமாதியான திதியும் இதுவாகும்.

20. 01. 2011, வியாழக்கிழமை,  18.00 மணி

 

எதிர்வரும் 30.07.2011  சனி காலை 10.00 மணிமுதல் 14.00 மணிவரை துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை விசேட பூசை நடைபெறும். அன்னதானமும் இடம் பெறும்.
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்தல், அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்

 
அம்பிகை அடியார்களே!
எதிர்வரும் 01.01.2011 சனிக்கிழமை காலையில் 09:00-12:00 வரை கோவில் திறந்திருக்கும்.
மாலை 06:00 மணிக்கு அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆங்கிலப்புத்தாண்டு விசேட பூசை துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை நடைபெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

மலரும் புத்தாண்டில் எமது தாயகத்தில் எம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு கிடைக்க அம்பாள் துர்க்கையின் அருளை வேண்டி நிற்போமாக.
நன்றி
 

நிகழும் விகிர்தி வருடம் கார்த்திகைமாதம் 27.10.2011 வியாழக்கிழமை தொடக்கம் 31.10.2011 திங்கக்கிழமை வரை5 நாட்களும் சாயங்காலம் முருகப் பெருமானுக்கு பூசை ஆராதனைகள் நடைபெறும். 6ம் நாள் 01.11.2011 செவ்வாய்க்கிழமை காலை பூசையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறூம்.அடியவர்கள் பூசை ஆராதனைகளில் கலந்து முருகப்பெருமானின் அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

அம்பிகை அடியார்களே!

எதிர்வரும் 14.04.2011 புதன் 18:00 மணிக்கு அருள்மிகு  துர்க்கை அம்மன் ஆலயத்தில்  சித்திரைப் புத்தாண்டு விசேட பூசை , விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை நடைபெறும் என்பதை அம்பாள் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். மலரும் சித்திரைப்புத்தாண்டில் எமது தாயகத்தில் எம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு கிடைக்க மீனாட்சி அம்பாள்அருளை வேண்டி நிற்போமாக.
 

  • 13.04.2011 செவ்வாய்க்கிழமை 18:00 மணி முதல் 20:00 மணி வரை ஆலயத்தில் மருந்து நீர் வழங்கப்படும்.
  • 14.04.2011 புதன்கிழமை 09.00 மணி முதல் 12:00 மணி – 17:00 மணி முதல் 21:00 வரை ஆலயம் திறந்திருக்கும்
 

பூசைகள்
No events
தைப்பொங்கல்

15. 01. 2012

அனைவருக்கும்
தைப்பொங்கல்

நல்வாழ்த்துக்கள் 

Sivan TV