பூசை தொடர்புகளுக்கு

பவான் 079 342 52 28

ரவி 078 745 99 96 

ரவி 041 440 65 50

திறக்கும் நேரம்

பூஜை நாட்கள்:

செவ்வாய், வெள்ளி, மற்றும் விசேட தினங்கள்

பூஜை நேரம்:

அபிஷேகம்: 18:30

பூஜை ஆரம்பம்: 19:15

பிரசாதம்: 20:30

பஜனாமிர்தம் இறுவட்டு

விளம்பரம்

நாட்காட்டி 2011

நிகழும் கர வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (25.11.2011) வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் அலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு.

இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவீரர் பூசை வழிபாடும் , மாவீரர் மோட்ச தீப வழிபாடும் நடைபெற திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு மாவீரர் கனவு நனவாகவும் , மாவீரர் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல துர்க்கை அம்மனை வேண்டி நிற்போம்.

அபிசேகம் மாலை 18.30 மணிக்கு
கூட்டுப்பிரார்த்தனை 18.45
விசேட பூசை இரவு 19.00
மாவீரர்களுக்கு விசேட பூசை 19.30
மாவீரர் மோட்ச தீப வழிபாடு 20.30

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் அருள்மிகு துர்கை அம்மன் ஆலயத்தினர்.

'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர்

 

அம்பிகை அடியார்களின் கவனத்திற்கு!!!

அம்பிகை அடியார்களே!

  ஆலயத்திற்குரிய நடைமுறைச்செலவுகள் அதிகரித்துச் செல்வதால் ஆலயத்தின் நன்மை கருதி அர்ச்சனை பற்றுச்சீட்டுக்கள், உபயப்பூசைகள், விசேட பூசைகள் என்பனவற்றுக்கான கொடுப்பனவுகளில் 01.08.2011 இல் இருந்து சில மாற்றங்களை அறிவிப்புப்பலகையில் பார்த்து தெரிந்து கொள்வதுடன், அடியார்கள் அனைவரும் இம் மாற்றங்களை கவனத்தில் எடுத்து ஆலய வளர்ச்சிக்கு உதவும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

21.06.2010

ஆலயபரிபாலனசபை

 

அம்பிகை அடியார்களே!

                             அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு தாங்கள் செலுத்தும் அன்பளிப்புக்கள் முதலில் அர்ச்சனை பற்றுச்சீட்டு பெறும் இடத்தில் பதிவு செய்து அதற்கான பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். அவை பணமாகவோ அல்லது பொருட்களாகவோ இருக்கலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் பட்சத்தில் தான் அவற்றை எமது பதிவுக்கு உட்படுத்த முடியும்.

  அவ்வாறு பதிவு செய்யப்படாத பட்சத்தில் அவை வருடாந்த ஆண்டறிக்கையில் பதிவு செய்யப்பட மாட்டாது என்பதை ஆலயபரிபாலனசபை தெரிவித்து கொள்கின்றது.

நன்றி

21.06.2010                

ஆலயபரிபாலனசபை

 

 

அம்பிகை அடியார்களின் கவனத்திற்கு!!!


எங்களின் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகமானது 12வது ஆண்டின் நிறைவில் நடத்த வேண்டியுள்ளது. எனவே தற்போது அம்பாள் ஆட்கொண்டிருக்கும் இந்த ஆலயமானது அதற்குரிய இடவசதி போதுமானதாக அமையவில்லை. எங்கள் ஆலயம் வளர்ச்சியடைந்து அடியவர்களின் பிரவேசமும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலமையில் ஆலயத்திற்காக ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. நிரந்தரமாகவோ அல்லது வாடகை அடிப்படையிலோ அமையலாம்.

விரிவு...

 

பூசைகள்
No events
தைப்பொங்கல்

15. 01. 2012

அனைவருக்கும்
தைப்பொங்கல்

நல்வாழ்த்துக்கள் 

Sivan TV