பூசை தொடர்புகளுக்கு

பவான் 079 342 52 28

ரவி 078 745 99 96 

ரவி 041 440 65 50

திறக்கும் நேரம்

பூஜை நாட்கள்:

செவ்வாய், வெள்ளி, மற்றும் விசேட தினங்கள்

பூஜை நேரம்:

அபிஷேகம்: 18:30

பூஜை ஆரம்பம்: 19:15

பிரசாதம்: 20:30

பஜனாமிர்தம் இறுவட்டு

விளம்பரம்

நாட்காட்டி 2011

அம்பிகை அடியார்களின் கவனத்திற்கு!!!


எங்களின் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகமானது 12வது ஆண்டின் நிறைவில் நடத்த வேண்டியுள்ளது. எனவே தற்போது அம்பாள் ஆட்கொண்டிருக்கும் இந்த ஆலயமானது அதற்குரிய இடவசதி போதுமானதாக அமையவில்லை. எங்கள் ஆலயம் வளர்ச்சியடைந்து அடியவர்களின் பிரவேசமும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலமையில் ஆலயத்திற்காக ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. நிரந்தரமாகவோ அல்லது வாடகை அடிப்படையிலோ அமையலாம்.

ஆலயம் அமைவதற்கான நிலப்பரப்பை அல்லது கட்டுமானத்துடன் கூடிய மண்டபத்தை தேடும்பணியில் ஆலயபரிபாலன சபையினரான நாங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். அடியார்களாகிய நீங்களும் உங்களால் முடிந்தவரை ஒத்துழைப்புச்செய்து உதவி புரியலாம். இது உங்கள் ஆலயம் உங்கள் ஒவ்வொருவரதும் கடமைகள் உண்டு. எங்கள் எதிர்கால இளம் சந்ததியினரின் ஆன்மீக வளர்ச்சிக்காக இந்த ஆலயத்தை விரிவுபடுத்தி புதிய இடத்தில் அமைக்க வேண்டிய பொறுப்பு அடியார்களாகிய உங்களின் கையில் உள்ளது.

எனவே ஆலயபரிபாலன சபையினருடன் சேர்ந்து ஆலய அமைப்பிடம் தேடும் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும்படி வேண்டுகின்றோம். புதிய ஆலயமானது கொடித்தம்பம் வெளிவீதி சுற்றுப் பிரகாரம் என்பன அமைந்ததாகவும், அம்பாள் வெளிவீதி திருஉலா வரக்கூடியதாக அமையப் பெற வேணடும்.

மேலும் சில நாட்களாக ஆலயம் வேறு இடத்தில் அமையப் போவதாகவும் இடம் கிடைத்ததாகவும் வீண் வதந்திகள் உலாவுகின்றது. அடியவர்கள் எதனையும் எவர் கருத்துக்களையும் கிரகிக்க வேண்டாம். அது அவர்களின் கற்பனை (கருத்து).

ஆலயத்திற்கு அமைப்பிடம் கிடைத்து உறுதியான பின்பு அடியவர்கள் பார்வைக்கு எழுத்து மூலமும் நிழற்படமூலமும் ஆலய விளம்பரப்பகுதியில் அறியத்தரப்படும். அதுவரை வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். ஆலய அமைப்பிடம் தேடும் பணிக்கு ஊக்கம் தந்து உதவி புரியும்படி வேண்டுகின்றோம்.

அருள்மிகு துர்க்கை அம்மன் பேரருளைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்களாக....

நன்றி

 28.12.2010        

இங்ஙனம்
ஆலயபரிபாலனசபை
 

 

பூசைகள்
No events
தைப்பொங்கல்

15. 01. 2012

அனைவருக்கும்
தைப்பொங்கல்

நல்வாழ்த்துக்கள் 

Sivan TV